ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை – உயர்நீதிமன்றம் அதிரடி!!

0
394
#image_title

ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை – உயர்நீதிமன்றம் அதிரடி!!

கடந்த 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை, உயர்கல்வித் துறை, கனிமவளத் துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பதவி வகித்து வந்த பொன்முடி அவர்கள் ஊழல் செய்து வருமானத்திற்கு மீறி சுமார் ரூ.1.36 கோடி மதிப்புடைய சொத்துகள் குவித்ததாக கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இருந்து வேலூர் முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு பொன்முடி ஊழல் செய்ததற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி கடந்த ஜூலை 28 அன்று பொன்முடி மற்றும் அவரது மனைவியை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக வேலூர் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு பிரிவு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் தாமனாக முன்வந்து இந்த வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்த நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன்பின் இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிக்க தொடங்கினார்.

கடந்த 19 ஆம் தேதி அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று தீர்வு வழங்கிய நீதிபதி அவர்கள் இன்று அவருக்கான தண்டனை விவரத்தை அறிவித்தார். பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தலா 15 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற உள்ள பொன்முடியின் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவி பறிபோகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleநகைப்பிரியர்களே இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!!
Next articleதிமுகவின் இந்தி எதிர்ப்புக்கு ஆப்பு வைத்த நிதிஷ் குமார்! குழப்பத்தில் ஸ்டாலின்