குளிர்காலத்தில் அனைவரும் இதை 1 கிளாஸ் அருந்த வேண்டும்..!!
குளிர் காலம் தொடங்கிவிட்டால் உடலில் பல வித பிரச்சனைகள் எழும். மார்பு சளி, மூட்டு வலி, கீல்வாத வலி, உடல் வலி, மூக்கடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இதை சரி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
இதற்கு ஓமம் தண்ணீர் சிறந்த தீர்வாக இருக்கும். ஓமத்தில் பாஸ்பரஸ், கால்சியம், கரோட்டின், ப்ரோட்டீன், பைபர், இரும்புச்சத்து, சோடியம், தயாமின் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.
இவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதோடு வாயுத் தொல்லை, நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளையும் சரி செய்ய உதவுகிறது.
குளிர்காலத்தில் மார்பில் சளி பாதிப்பு பலருக்கும் இருக்கும். இதனை சரி செய்ய காலை நேரத்தில் 1 கிளாஸ் ஓமம் தண்ணீர் செய்து அருந்தலாம். இந்த தண்ணீர் தொண்டை வலியையும் சரி செய்ய உதவுகிறது.
வாயுத் தொல்லைக்கு ஓமம் நீர் சிறந்த தீர்வாக இருக்கிறது. தினமும் 1 கிளாஸ் ஓமம் நீர் அருந்தி வந்தால் நெஞ்சு எரிச்சல் பாதிப்பு குணமாகும். செரிமான கோளாறை சரி செய்ய இந்த நீர் பெரிதும் உதவும்.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய இரவு தூங்கச் செல்வதற்கு முன் 1 கிளாஸ் ஓமம் நீர் அருந்துவது நல்லது.
குளிர்காலத்தில் மூட்டுவலி பாதிப்பை பலரும் சந்தித்து வருகிறார்கள். இந்த பாதிப்பை சரி செய்ய காலை, மாலை நேரத்தில் ஓமம் தண்ணீர் அருந்தி வரலாம்.
ஓமம் தண்ணீர் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
*ஓமம்
*தண்ணீர்
*தேன்
செய்முறை…
ஒரு கிளாஸ் அளவு நீரில் 1/4 தேக்கரண்டி ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து அருந்தலாம்.