மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ்.. ஜனவரி முதல் இந்த 3 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கிறார்!!

0
267
#image_title

மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ்.. ஜனவரி முதல் இந்த 3 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கிறார்!!

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பிக்களுக்கு எதிரான வழக்குகளை ஜனவரி மாதம் முதல் விசாரிக்க இருக்கிறார்.

1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு பிரிவு அவர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை என பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்தது.

வேலூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். பொன்முடி மட்டும் இன்றி அமைச்சர் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி உள்ளிட்டவர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவிட்டதை எதிர்த்து மறுஆய்வுக்கு எடுத்ததால் அதிக கவனம் பெற்ற நீதிபதியாக திகழ்ந்தார். ஊழல் வழக்குகளை விசாரிப்பதில் தனித்துவமான நீதிபதியாக திகழ்ந்த இவர் பொன்முடிக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரித்து வந்த போது உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார். அதன் பின் நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள் இந்த வழக்கை விசாரித்து பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களுக்கு உயர்நீதிமன்றத்தில் எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் இலாகா மீண்டும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஜனவரி மாதம் முதல் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSRR.ராமச்சந்திரன், பொன்முடி உள்ளிட்டவர்களின் மீதான வழக்கு என மொத்தம் 6 ஊழல் வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளார்

Previous articleபொன்முடியை தொடர்ந்து 10 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கிற்கு விரைவில் தீர்ப்பு வரும் – அண்ணாமலை பேட்டி!
Next articleமூக்கை நுழைத்த வடிவேலு! தோல்வி அடைந்த அந்தப் படம்!