மூக்கை நுழைத்த வடிவேலு! தோல்வி அடைந்த அந்தப் படம்!

0
195
#image_title

வடிவேலு என்பவரை பற்றி நமக்கு தெரியும் அவர் மிகப்பெரிய காமெடியன் பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கின்றார். அரசியல் காரணமாக அவர் தனது சொந்த ஊரான மதுரைலேயே செட்டிலாகி விட்டார். பிறகு மாமன்னன் நாய் சேகர் அந்த படங்களில் ரீஎன்றி கொடுத்தார்.

 

இவரைப் பற்றிய ஒரு செய்தி தான் இப்பொழுது நமக்கு கிடைத்துள்ளது.

 

23ஆம் புலிகேசி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. காமெடிக்கு பஞ்சமே இல்லை அந்த அளவிற்கு அந்த படம் அமைந்தது.

 

அந்த படத்திற்கு பிறகு தம்பி ராமையா அவர்களின் இயக்கத்தில் இந்திரா லோகத்தில் நா அழகப்பன் என்ற படம் இயக்கப்பட்டு வெளிவந்தது. வெளிவந்து அவ்வளவு வரவேற்பு தரவில்லை இதற்கு முக்கிய காரணம் வடிவேலு தானாம்.

 

தம்பி ராமையா அவர்கள் அவருக்கு என்ன வசனம் ஆகியவற்றை எழுதி இவரிடம் சொல்லுவாராம். இந்த சீனுக்கு இதுதான் பண்ண வேண்டும் என்று இப்படித்தான் என்று.  ஆனால் அப்படியே அதற்கு உல்டாவாக சொல்லுவாரம் வடிவேலு. தம்பி ராமையா இல்லை அண்ணா இது சரிவராது என்று சொன்னால், எனக்கு காமெடி லைன் தெரியும். மக்களுக்கு என்ன பிடிக்கும் என்பது தெரியும் நான் சொல்வதைக் கேள் என்று சொல்லி அவர் போக்கில் நடிப்பாராம். அப்படி  நடித்த பொழுது வெளிவந்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் தோல்வியிலேயே முடிந்தது.

 

இதை பற்றிய தம்பி ராமையா   பேட்டி ஒன்றில் தெரிவித்த பொழுது இதற்கு முழு காரணம் அவர்தான்.  இது நான் எழுதி வந்த கொண்டு வந்த ஸ்கிரிப்டே இது கிடையாது. முழுக்க முழுக்க  நான் சொன்னதை அவர் செய்யவில்லை என்று கூட குறிப்பிட்டிருக்கிறாராம்.

 

இப்படி இவர் ஒரு இயக்குனரின் விஷயத்தில் மூக்கை நுழைப்பது தவறு என்றால் உதயநிதிக்கு சப்போர்ட்டாக மாரி செல்வராஜ்  இதை பண்ணுங்கள் அதை பண்ணுங்கள் என்பது சொல்லுவதும் தவறுதான் என்று தானே அர்த்தம், அதற்கு நீங்கள் எப்படி ஆதரவு அளித்து அது அவனுடைய ஊர் அவனுக்குத் தெரியும் என்று சொல்கிறீர்கள்? எத்தனையோ அந்த ஊரில் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஊராட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் பொழுது ஏன் மாரி செல்வராஜ் உடன் செல்ல வேண்டும் அதற்கு ஏன் ஆதரவு அளிக்கிறீர்கள் என்று கமெண்ட்களை நெடிசன்கள் கேட்டு வருகின்றனர்.

author avatar
Kowsalya