முடி உதிர்வு நின்று அதன் வளர்ச்சி அதிகரிக்க இந்த எண்ணையை பயன்படுத்துங்கள்!!
ஆண், பெண் என்று அனைவரும் முடி உதிர்வு பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். மோசமான வாழ்க்கை முறை, முறையற்ற உணவுமுறை பழக்கத்தால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. தலை முடி பராமரிப்பு நாளுக்குள் நாள் குறைந்து வருகிறது. முறையற்ற தூக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது.
இதை சரி செய்ய வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மூலிகை எண்ணெய் தயார் செய்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
*கேரட்
*நெல்லிக்காய்
*சின்ன வெங்காயம்
*கறிவேப்பிலை
*கருஞ்சீரகம்
செய்முறை…
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய், கேரட், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கருஞ்சீரகம் சேர்த்து நன்கு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மிதமான தீயில் நன்கு காய்ச்சவும்.
எண்ணெய் நிறம் பச்சை நிறத்தில் இருந்து பிரவுன் நிறத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
எண்ணெய் நன்கு ஆறியப் பின்னர் வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து வருவதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.