இல்லத்தரசிகளுக்கு பயன்படக் கூடிய 10 சிம்பிள் சமையல் குறிப்புகள்!

0
220
#image_title

இல்லத்தரசிகளுக்கு பயன்படக் கூடிய 10 சிம்பிள் சமையல் குறிப்புகள்!

1)காய் பிரியாணி செய்யும் பொழுது அதில் இஞ்சி, பூண்டுடன் 2 பச்சை மிளகாய் மற்றும் 1 கைப்பிடி அளவு புதினா சேர்த்து அரைத்து பயன்படுத்தினால் அதிக சுவை மற்றும் வாசனையுடன் இருக்கும்.

2)எலுமிச்சம் பழத்தை நியூஸ் பேப்பரில் வைத்து மடக்கி பிரிட்ஜில் வைத்தால் 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்.

3)சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்க இலவங்கத்தை போட்டு வைக்கவும்.

4)மளிகை பொருட்கள் கெட்டு போகாமல் நீண்ட நாட்கள் பயன்படுத்த பூண்டு காம்பை அதில் போட்டு வைக்கலாம். அதேபோல் மளிகை பொருட்களை லேசாக வறுத்து ஆறவிட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.

5)மளிகை பொருட்களில் மிளகாய் போட்டு வைத்தால் வண்டு பிடிக்காது.

6)கிலோ கணக்கில் வாங்கிய புளி கெட்டு போகாமல் இருக்க புளியில் 2 அல்லது 3 தேங்காய் ஓட்டை போட்டு வைக்கலாம்.

7)தேங்காய் எண்ணெய் கெட்டு போகாமல் இருக்க அதில் 3 அல்லது 3 மிளகு போட்டு வைக்கலாம்.

8)அரிசியில் வண்டு பிடிக்காமல் இருக்க வசம்பு அல்லது பட்டை துண்டுகளை போட்டு வைக்கலாம்.

9)பூண்டு நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க உப்பை வறுத்து ஒரு டப்பாவில் கொட்டி அதில் பூண்டை வைத்து பயன்படுத்தலாம்.

Previous articleகால் கருப்பு ஒரு இரவில் நீங்க இயற்கை வழிகள் இதோ!
Next articleநகங்களுக்கு நெயில் பாலிஷ் பயன்படுத்துபவர்கள் இதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்!