நம்முடைய உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில டிப்ஸ் உங்களுக்காக!

0
268
#image_title

நம்முடைய உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில டிப்ஸ் உங்களுக்காக!

வளரும் நாகரிக காலத்திற்கு ஏற்ப நாம் வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டு வருகின்றோம். அந்த வகையில் நம் உடலில் பல வகையான நச்சுக்கள் சேர்கின்றது. இந்த பேச்சுக்கள் நம் உடலில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. பலவிதமான நாள்பட்ட நோய்களையும் ஏற்படுத்தி விடுகின்றது. அவ்வாறு நம் உடலில் தங்கி இருக்கும் தேவையற்ற நச்சுக்களை நாம் இயற்கையான முறையில் வெளியேற்றலாம். அது எவ்வாறு என்பது குறித்து பார்க்கலாம்.

உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் முறை…

* இஞ்சியை எடுத்து தோல் நீக்கி நன்கு அரைத்து அதிலிருந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

* காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் அளவு வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் அரை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள பேச்சுக்கள் வெளியேறும். மேலும் ரத்த நாளங்களில் உள்ள கழிவுகளும் வெளியேறும்.

* தண்ணீரில் இஞ்சியை சேர்த்து காய்ச்சி அதில் தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும். கல்லீரலில் கழிவுகள் சேராமல் காக்கும்.

* நாம் உண்ணும் உணவில் அன்றாடம் பூண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பேச்சுக்கள் அனைத்தும் வெளியேறி விடும்.

* கடுக்காய்த் தூள் 5 கிராம் அளவு எடுத்து அதை வெந்நீரில் கலந்து கொள்ளவும். இதை இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் குடித்து வந்தால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறி விடும்.