பண முடக்கம் நீங்கி வரவு அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!

0
326
#image_title

பண முடக்கம் நீங்கி வரவு அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!

பணக் கஷ்டம் நீங்கி வரவு அதிகரிக்க வசம்பு பரிகாரம் செய்வது நல்லது. இந்த வசம்பு பரிகாரத்தை எவ்வாறு செய்வது என்பது குறித்த தெளிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது சனிக் கிழமையில் செய்ய வேண்டும். செவ்வாய் கிழமையில் செய்பவர்கள் சனிக்கிழமையில் வசம்பை தூக்கி போட வேண்டும். சனிக்கிழமையில் செய்பவர்கள் செவ்வாய் கிழமையில் வசம்பை தூக்கி போட வேண்டும்.

முதலில் ஒரு வசம்பை எடுத்து 4 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இந்த நான்கு துண்டுகளை வீட்டின் நான்கு மூலையில் வைக்க வேண்டும். அதற்கு முன்னதாக இந்த 4 துண்டு வசம்பையும் கையில் வைத்துக் கொண்டு தங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பண முடக்கம், பணக் கஷ்டம் நீங்கி அதன் வரவு அதிகரிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் யார் கண்ணிலும் படாதவாறு வைத்து விடவும்.

அடுத்து ஒரு வசம்பை எடுத்து அதன் மீது நெய் தடவி சூடுபடுத்தி வீடு முழுக்க வாசனையை பரப்பவும். பின்னர் இந்த வசம்பை கால் படாத இடத்தில் போட்டு விடவும்.

இந்த பரிகாரத்தை மாதம் ஒரு முறை செவ்வாய் அல்லது சனி அன்று செய்து வந்தால் பணப் பிரச்சனை நீங்கி உங்களுக்கு வேண்டிய பண வரவு வரத் தொடங்கும்.

Previous articleமார்பில் தேங்கி இருக்கும் சளி கபம் நீங்க மூலிகை கசாயம் செய்து குடிங்க!
Next articleசுகர் லெவல் குறைய இந்த இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!