இப்படி செய்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பாத்ரூமில் உப்பு கறை படியாது!!

Photo of author

By Divya

இப்படி செய்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பாத்ரூமில் உப்பு கறை படியாது!!

பாத்ரூமில் படிந்து கிடக்கும் உப்பு கறை முழுவதும் செலவின்றி நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

*ஈனோ
*வாஷிங் லிக்விட்
*தண்ணீர்

ஒரு பாக்கெட்டில் 1 பாக்கெட் ஈனோ பவுடரை கொட்டிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 ஸ்பூன் அளவு வாஷிங் லிக்விட் ஊற்றி கலந்து கொள்ளவும். அடுத்து அதில் தண்ணீர் நிரப்பி பாத்ரூம் முழுவதும் ஊற்றி விடவும். 15 நிமிடங்களுக்கு ஊறவைத்து பின்னர் தண்ணீர் கொண்டு அடித்து விடவும். இவ்வாறு செய்தால் பாத்ரூமில் படிந்து கிடந்த உப்பு கறை, மஞ்சள் கறை நீங்கி பளிச்சிடும்.

*பாராசிட்டமால் மாத்திரை
*வாஷிங் லிக்விட்
*தண்ணீர்

ஒரு டப்பாவில் 5 பாராசிட்டமால் மாத்திரையை இடித்து போட்டுக் கொள்ளவும். அடுத்து அதில் 1 ஸ்பூன் அளவு வாஷிங் லிக்விட் மற்றும் தண்ணீர் ஊற்றி கரைத்து பாத்ரூம் முழுவதும் ஊற்றி ஊற விடவும். பின்னர் தண்ணீர் கொண்டு தேய்த்து விட்டால் உப்பு கறை முழுவதும் நீங்கி பளிச்சிடும்.

*கோலமாவு
*சோடா உப்பு
*தண்ணீர்

ஒரு கைப்பிடி அளவு கோலமாவு மற்றும் ஒரு கைப்பிடி அளவு சோடா உப்பு ஆகியவற்றை பாத்ரூம் முழுவதும் தூவி 20 நிமிடங்களுக்கு பின்னர் பிரஷ் வைத்து தேய்த்து தண்ணீர் கொண்டு அடித்து விட்டால் கறைகள் முழுவதும் நீங்கிவிடும்.