கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்..!!
இன்றைய உலகில் கணவன் மனைவி சண்டை என்பது சகஜமான ஒன்று தான். அடிக்கடி சண்டை, மனக் கசப்பு, கருத்து வேறுபாடு உள்ளிட்டவைகளால் விவாகரத்து வரை சென்று விடுகிறது. இதனால் அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் தான் பாதிக்கப்படுகிறது.
கணவன் மனைவி ஒற்றுமை எனபது மிகவும் முக்கியம் ஆகும். சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து வரவும்.
இந்த பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருட்கள்…
*கோமதி சக்கரம்
*பன்னீர்
*குங்குமம்
இந்த சக்தி வாய்ந்த கோமதி சக்கரம் நாட்டு மருந்து கடை, பூஜை பொருட்கள் விற்கும் இடத்தில் கிடைக்கும்.
11 என்ற எண்ணிக்கையில் கோமதி சக்கரம் வாங்கிக் கொள்ளவும். அதை பன்னீரில் போட்டு கழுவி வைத்துக் கொள்ளவும்.
அடுத்து 2 பாக்கெட் குங்குமம் வாங்கி அதை கோயிலுக்கு எடுத்து சென்று ஒரு பாக்கெட்டை கோயிலுக்கு கொடுத்து விட்டு மற்றொரு பாக்கெட்டை வீட்டிற்கு கொண்டு வரவும்.
கொண்டு வந்த குங்குமத்தை கோமதி சக்கரம் உள்ள கிண்ணத்தில் கொட்டி வைக்கவும். இதை உங்கள் படுக்கை அறையில் ஒரு இடத்தில் வைத்து விடவும்.
இவ்வாறு செய்வதால் கணவன்-மனைவி சண்டை சச்சரவு நின்று ஒற்றுமை அதிகரிக்கும். இவ்வாறு நடந்தால் அரை கிலோ அளவு குங்குமத்தை வாங்கி கோயிலுக்கு கொடுத்து விட்டு வீட்டில் உள்ள கோமதி சக்கரத்தை கழுவி சுத்தம் செய்து பூஜை அறையில் வைத்து வழிபடவும்.