கேரளா ஸ்பெஷல் உருளி ஆப்பம் – அற்புத சுவையில் செய்யும் முறை!

0
244
#image_title

கேரளா ஸ்பெஷல் உருளி ஆப்பம் – அற்புத சுவையில் செய்யும் முறை!

உருளி என்ற பாத்திரத்தில் செய்யப்படுவதால் இவை உருளி அப்பம் என்று அழைக்கப்படுகிறது. பச்சரிசி, தேங்காய் துருவல் உள்ளிட்ட சில பொருட்கள் வைத்து தயார் செய்யப்படும் இந்த ஆப்பம் கேரளர்களின் விருப்ப உணவாக இருக்கின்றது.

தேவையான பொருட்கள்..

*பிரவுன் பச்சரிசி – 1 கப்
*தேங்காய் துருவல் – 1/2 கப்
*பெரிய வெங்காயம் – 1
*அரிசி சாதம் – 1/2 கப்
*உப்பு – தேவையான அளவு
*பச்சை மிளகாய் – 2
*கறிவேப்பிலை – 1 கொத்து
*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

உருளி ஆப்பம் செய்யும் முறை…

ஒரு பாத்திரத்தில் 1 கப் பிரவுன் பச்சரிசி போட்டு தண்ணீர் ஊற்றி அலசி ஊற வைக்கவும்.

3 முதல் 4 மணி நேரம் வரை அவை ஊறி வந்த பின்னர் அதன் தண்ணீரை வடித்து விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் அதை போட்டுக் கொள்ளவும். அதனுடன் 1/2 கப் தேங்காய் துருவல், 1 பெரிய வெங்காயம்(நறுக்கியது), வடித்த அரிசி சாதம் 1/2 கப், உப்பு தேவையான அளவு, 2 பச்சை மிளகாய் நறுக்கியது, 1 கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இந்த மாவை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி தோசை மாவு பதத்திற்கு நன்கு கலக்கி விடவும்.

அடுப்பில் உருளி பாத்திரம் வைத்து அவை சூடானதும் அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள மாவை ஆப்பம் போல் ஊற்றி எடுத்துக் கொள்ளவும்.

தேங்காய் எண்ணெய் அதிகம் சேர்த்தால் தான் இந்த ஆப்பம் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Previous articleகுடிமன்களுக்கு அதிர்ச்சி நியூஸ்.. டாஸ்மாக்கில் பிப்ரவரி 01 முதல் மது விலை உயர்கிறது!
Next articleநாம் செய்யும் இந்த தவறுகள் மூதேவி.. வீட்டிற்கு வர காரணமாகிவிடும்!