குடிமன்களுக்கு அதிர்ச்சி நியூஸ்.. டாஸ்மாக்கில் பிப்ரவரி 01 முதல் மது விலை உயர்கிறது!

0
165
#image_title

குடிமன்களுக்கு அதிர்ச்சி நியூஸ்.. டாஸ்மாக்கில் பிப்ரவரி 01 முதல் மது விலை உயர்கிறது!

தமிழகத்தை பொறுத்தவரை மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது. உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் இந்த மதுவை அரசே ஏற்று நடுத்தி வருகிறது. திமுக அரசு நடத்தி வரும் டாஸ்மாக் நிறுவனம் ஒவ்வொரு நாளும் டார்கெட் பிக்ஸ் செய்து மதுவை விற்றுவருகிறது. இதனால் குடிமகன்களை கொண்ட பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றது.

சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் டாஸ்மாக்கில் கொடுத்து குடிக்கு அடிமையாகும் இளைய தலைமுறையினரை பார்த்தால் மனதிற்கு வேதனை அளிக்கின்றது. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் படிக்கின்ற வயதில் மது பழக்கத்திற்கு அடிமையாகி வருவதால் அவர்களின் எதிர்காலம்… இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

மது பழக்கம் தொடர்ந்தால் உடல் உள் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு.. கொடுமையான மரணத்தை தான் குடிமன்கள் சந்திப்பார்கள்.

பெண்கள்.. மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும்.. மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று போராடி வருவது காலம் காலமாக நடந்து வருகிறது என்றாலும்.. அதையெல்லாம் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள தமிழக அரசு.. தங்கள் கஜானாவை நிரப்புவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறது.

ஆட்சி வந்தால் மது விலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்ற திமுகவிற்கு ஓட்டு போட்ட பெண்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே…

மதுவிலக்கை அமல்படுத்தும் எண்ணம் எல்லாம் எங்களுக்கு இல்லை.. டாஸ்மாக் மூலம் எப்படி அதிக வருவாய் ஈட்டலாம் என்று மட்டுமே யோசிப்போம்.. என்று திமுக அரசு தனது செயல்களால் நிரூபித்து வருகிறது.

அதன்படி டாஸ்மாக் நிறுவனம் பிப்ரவரி 01 ஆம் தேதி முதல் மது பாட்டில்களின் விலை உயரப்போகிறது என்ற தகவல் வெளியாகி குடிமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.

பிப்ரவரி 01… மது விலை உயர்வு…

ரம், விஸ்கி, பிராந்தி, ஓட்கா உள்ளிட்ட குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்கிறது. அடுத்ததாக பீர் ரூ.10, ஆஃப் ரூ.20 மற்றும் ஃபுல் ரூ.40 வரை விலை அதிகரிக்க போகிறது. பாட்டில் விலையை விட எக்ஸ்ட்ரா 10 ரூபாய் விலை வைத்து விற்று வரும் டாஸ்மாக் கடைகளில் வாக்குவாதம் செய்யும் மது வெறியர்களுக்கு இந்த விலையேற்றம் கடும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.