ஆட்டம் காட்டும் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து போக.. சூப்பர் டிப்ஸ்..!

Photo of author

By Divya

ஆட்டம் காட்டும் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து போக.. சூப்பர் டிப்ஸ்..!

Divya

Updated on:

ஆட்டம் காட்டும் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து போக.. சூப்பர் டிப்ஸ்..!

டிப் 01:-

ஒரு கிண்ணத்தில் சிறிது நாட்டு சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கி ஒரு பீங்கான் பாட்டிலின் உள் பகுதியில் பூசி கரப்பான் பூச்சி உள்ள இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்வதினால் கரப்பான் பூச்சிகள் அந்த வாசனைக்கு இழுக்கப்பட்டு பாட்டிலுக்குள் புகுந்து விடும். அப்பொழுது அதை ஒழித்து விடலாம்.

டிப் 02:-

ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து மிக்ஸ் செய்து கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் தூவி விட்டால் அதன் நடமாட்டம் இருக்காது.

டிப் 03:-

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கோதுமை மாவு மற்றும் போரிக் ஆசிட் சேர்த்து கலந்து கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்தால் அதன் தொல்லைக்கு தீர்வு கிடைக்கும்.

டிப் 04:-

ஒரு கிண்ணத்தில் ஒரு வேக வைத்த முட்டையின் வெள்ளை கரு மற்றும் போரிக் ஆசிட் சேர்த்து கலந்து கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைத்தால் அதை சாப்பிட்டு கரப்பான் பூச்சிகள் மடியும்.