முகத்தில் உள்ள மங்கு சில தினங்களில் மறைந்து விடும்.. இவ்வாறு செய்தால்!
முக அழகை கெடுத்து இளம் வயதில் முதுமை தோற்றத்தை கொடுக்கும் மங்கு ஒரு தோல் தொடர்பான நோய் பாதிப்பு ஆகும்.
தேமல், வண்டு கடி போல் மங்கு அனைவருக்கும் ஏற்படக் கூடிய பாதிப்பு… இந்த மங்கு ஹார்மோன் மாற்றம், உடல் சூடு இருப்பவர்களுக்கு ஏற்படக் கூடிய ஒன்று.
அதுமட்டும் இன்றி தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு ஏற்படக் கூடிய ஒரு தோல் நோய் பாதிப்பாக இது இருக்கின்றது.
இந்த மங்கு ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது.
மங்கு மறைய வீட்டு வைத்தியம்…
*அதிமதுரம்
ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் அதிமதுரம் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தை கழுவினால் மங்கு சில தினங்களில் மறையும்.
*முல்தானி மெட்டி
*ரோஸ் வாட்டர்
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரத்திற்கு பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தால் மங்கு சில தினங்களில் மறையும்.