வெள்ளை முடியை கரு கரு முடியாக மாற்ற உதவும் கடுகு எண்ணெய்..! எவ்வாறு பயன்படுத்துவது?

Photo of author

By Divya

வெள்ளை முடியை கரு கரு முடியாக மாற்ற உதவும் கடுகு எண்ணெய்..! எவ்வாறு பயன்படுத்துவது?

வெள்ளை முடி வந்து விட்டால் இளமை தோற்றம் முதுமை தோற்றமாக மாறிவிடும். தலைமுடியை கருமையாக மாற்ற கெமிக்கல் ஷாம்பு, கெமிக்கல் டை, கெமிக்கல் எண்ணெய் என எதை பயன்படுத்தினாலும் பக்க விளைவுகள் தான் ஏற்படும்.

கெமிக்கல் பொருட்களால் தலைமுடி உதிர்தல், தோல் பிரச்சனை தான் அதிகம் ஏற்படும். இதை தவிர்க்க இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்லது. இதற்கு கடுகு எண்ணையுடன் மேலும் சில பொருட்களை பயன்படுத்தினால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

உங்களுக்கான இயற்கை தீர்வு இதோ….

தேவையான பொருட்கள்:-

*கடுகு எண்ணெய்
*நெல்லிக்காய்
*வெந்தயம்
*கருஞ்சீரகம்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/4 லிட்டர் கடுகு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

அடுத்து அதில் 1/4 கப் நறுக்கிய பெரு நெல்லிக்காய், 1 ஸ்பூன் வெந்தயம் மற்றும் 1 ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணையை ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும்.

தலைமுடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி தடவி வந்தால் வெள்ளை முடி கரு கருன்னு மாறிடும்.