முட்டையை உடையாமல் வேக வைக்கும் இந்த ட்ரிக்ஸ் தெரியுமா?

Photo of author

By Divya

முட்டையை உடையாமல் வேக வைக்கும் இந்த ட்ரிக்ஸ் தெரியுமா?

அதிக ஊட்டச்சத்துக்கள், புரதம் நிறைந்த முட்டையை வேக வைத்து சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும். இந்த முட்டை விரிசல் இல்லாமல் வெந்து வர சில ட்ரிக்ஸ் உங்களுக்காக…

ட்ரிக் 01:-

முட்டை வேக வைக்கும் பொழுது சிறிது கல் உப்பு போட்டு வேக வைத்தால் விரிசல் இல்லாத… உடையாத முட்டை கிடைக்கும். முட்டை வேக வைக்கும் பொழுது அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். வெந்து வந்த பின்னர் குளிர்ந்த நீரில் போட்டு சில நிமிடங்களுக்கு ஆறவிட்டு பின்னர் உரித்தால் முட்டை விரிசல் இல்லாமல் கிடைக்கும்.

ட்ரிக் 02:-

பாத்திரத்தில் முட்டையை வைத்து தண்ணீர் ஊற்றி 1 ஸ்பூன் கல் உப்பு 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேக வைத்தால் முட்டை விரிசல் இல்லாமல் வெந்து வரும்.

ட்ரிக் 03:-

பாத்திரத்தில் முட்டையை வைத்து தண்ணீர் ஊற்றி 1 ஸ்பூன் கல் உப்பு 1 ஸ்பூன் வினிகர் ஊற்றி வேக வைத்தால் முட்டை விரிசல் இல்லாமல் வெந்து வரும்.

ட்ரிக் 04:-

பாத்திரத்தில் முட்டையை வைத்து தண்ணீர் ஊற்றி சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயத்தின் தோல் போட்டு வேக வைத்தால் முட்டை விரிசல் இல்லாமல் வெந்து வரும்.