கடன் தீர சொல்ல வேண்டிய மந்திரமும்.. ஏற்ற வேண்டிய தீபமும்..!
கடன் இல்லாத வாழ்வு வாழ்பவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். ஆனால் பெரும்பாலானோருக்கு இவ்வாறு ஒரு வாழ்க்கை அமைவதில்லை. காரணம் விலைவாசி உயர்வு, குறைவான சம்பளம் போன்ற பல காரணங்களால் பணம் சேமிக்க முடியாமல் போய்விடுகிறது.
பல தடைகளை தாண்டி சிறுக சிறுக சேமித்தாலும் அவையும் ஏதேனும் ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இவ்வாறு பணம் சேமிக்க வழி இருந்தும் அதை சேமிக்க முடியாமல் செய்யும் தடைகள் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யவும்.
கடனை தீர்க்க விநாயகரை வழிபடுவது நல்லது. அதுவும் வளர்பிறை நாளில் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
முதலில் வீட்டில் உள்ள விநாயகர் படத்திற்கு மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைத்து பூ வைக்கவும்.
பிறகு விநாயகர் படத்திற்கு முன் ஒரு மண் அகல் வைத்து இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றவும். அடுத்து “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். இவ்வாறு செய்தால் கடன் பிரச்சனை முழுமையாக தீரும்.