தமிழகத்தில் அடிக்கல் நாட்ட அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி! பாஜக உற்சாகம்!
தமிழகத்தில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பல்வேறு பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதற்காக பிப்.27ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மதியம் 2 மணிக்கு திருப்பூர் பல்லடத்தில் நடைபெறும் என் மனம் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதனை அடுத்து கேரளா செல்லும் முதல்வர் பிப்.28ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார்.
பின்னர் தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
பிறகு குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ராமேஸ்வரம் பாம்பன் இடையே அமைக்கப்பட்ட பாலத்தை பிரதமர் மோடி பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் செல்லக்கூடிய பிரதமர் மோடி திருநெல்வேலிக்கு சென்று பாஜக சார்பில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதாரணி பாஜகவை இணைய உள்ளதாக கூறப்படுகிறது.