தில்லு திராணி இருந்தால் திமுக வழக்கு போடட்டும்! விளாசிய எடப்பாடி !

0
177
#image_title

தில்லு திராணி இருந்தால் திமுக வழக்கு போடட்டும்! விளாசிய எடப்பாடி !

மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மதுரையில் ₹600 கோடி செலவில் டைட்டில் பார்க் அமைக்கப்படும் என அறிவித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அதற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை, அதற்கான பணிகளும் துவங்கப்படவில்லை.

மதுரை மாநகர வளர்ச்சிக்காக 17 பேர் கொண்ட நகர வளர்ச்சி குழுவை அமைத்தார்கள். தற்போது அந்த குழு இருக்கிறதா என்பதே தெரியவில்லை. மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அறிவிப்புடன் மட்டுமே இருக்கிறது. அதிமுகவின் அனைத்து திட்டங்களையும் கிடப்பில் போட்டுள்ளது திமுக அரசு. திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி மிகப் பிரமாண்டமாக வெற்றிபெறும்.” எனத் தெரிவித்தார்.

மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரையில் அது கட்சி இல்லை கார்ப்பரேட் கம்பெனி என விமர்சித்துள்ளார்.

மேகதாது பிரச்சனையை அதிமுக கண்டித்தோம். அதனை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம். ஆனால் திமுக ஓட்டெடுப்பில் கலந்து கொண்டது. தில்லு திராணி இருந்தால் திமுக வழக்கு போடட்டும் என விளாசியுள்ளார்.

மேலும் அதிமுகவில் இருந்து விலகியவர்கள் அனைவரையும் இணைத்து தேர்தல் நேரத்தில் கட்சியையும், கட்சி சின்னத்தையும் முடக்குவதாக கூறப்பட்ட செய்தியாளரின் கேள்விக்கு, ”அவர்களது ஆசை நிராசையாகவே இருக்கும்” என பதிலளித்தார்.

author avatar
Preethi