வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம் – அதிருப்தியில் பாமக வெளிநடப்பு!!

0
361
வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம் - அதிருப்தியில் பாமக வெளிநடப்பு!!
Chief Minister's explanation about Vanniyar seat reservation - Bamaka walkout in dissatisfaction!!

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம் – அதிருப்தியில் பாமக வெளிநடப்பு!!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைப்பது என்பது தற்பொழுது வரை ஒரு போராட்டமாகவே இருந்து வருகிறது.எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக முன்பு ஆட்சியில் இருக்கும் பொழுது 10.5 இட ஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டது.ஆனால் அதனை அனுபவிப்பதற்கு முன்னதாகவே பலரும் அதனை முடக்கிவிட்டனர்.இந்த வழக்கானது உச்சநீதிமன்றம் வரை சென்று தற்போது அது தமிழக அரசு கைக்கு வந்துள்ளது.

இவ்வாறு வந்த பொழுதும் மிகவும் எளிமையான முறையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுக்கலாம்.ஆனால் அது கிடைப்பதென்பது தற்பொழுது இருக்கும் ஆளும் கட்சிக்கு சிறிதும் விருப்பமில்லை. இதன் காரணமாகவே ஒவ்வொரு முறை சாதிவாரி கணக்கெடுப்பை பற்றி பேசும் பொழுதெல்லாம் சப்பை கட்டும் விதமாக பல பதில்களை தான் கூறி வருகிறது.

சட்டமன்ற கூட்டத்தொடரானது தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் இன்று இது குறித்து பாமக கேள்வி எழுப்பியது.ஆனால் சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை எனக் கூறி அந்த கேள்வியில் இருந்து முதல்வர் பின் வாங்கினார்.இதுகுறித்து மேற்கொண்டு பாமகவினர் கேள்வி எழுப்பிய பட்சத்தில், திமுக நிர்வாகிகள் அதனை மறுத்து அவையை நடத்த முற்பட்டனர்.

இச்சமயமும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தண்ணீரில் எழுதப்பட்ட எழுத்துப் போன்று தான் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. இதன் காரணமாக அவையில் இருந்த பாமக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்ய நேரிட்டது.இதற்கென்று தீர்க்காமான முடிவெடுக்காமல் இந்த ஒதுக்கீடுக்கு காலம் தாழ்த்துவதையே ஆளும் கட்சி வழக்கமான ஒன்றாக வைத்துள்ளது.

Previous articleஉச்சத்தை தொட்ட அரிசி விலை – சாமானியனின் நிலை ?
Next articleசற்றுமுன்: மருந்து சீட்டுகளில் இந்த லெட்டரில் தான் எழுத வேண்டும் – மருத்துவர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு!!