உச்சத்தை தொட்ட அரிசி விலை – சாமானியனின் நிலை ?

0
223
#image_title

உச்சத்தை தொட்ட அரிசி விலை – சாமானியனின் நிலை ?

தமிழகத்தை பொறுத்தவரை மக்களின் மிகவும் அத்தியாவசியமான பொருட்களில் முக்கியமானவை அரிசியே ,கடந்த நான்கு மாதங்களாக அரிசியின் விலை படிப்படியாக உயர்ந்த நிலையில் தற்பொழுது மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் போதிய மழை இல்லாததாலும், மாறுபட்ட வானிலையினாலும் போதிய அறுவடை நடைபெறவில்லை அதுமட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் இருந்து இங்கு வந்து போட்டி போட்டுக்கொண்டு நெல் மற்றும் அரிசியை வாங்கி செல்வதால் அரிசி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் மொத்த விற்பனையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி தற்போது ரூ.68 ஆக உயர்ந்துள்ளது. ரூ.60-க்கு விற்ற வேகவைத்த அரிசி ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. பாஸ்மதி அரிசி ரூ.120-க்கு விற்கப்படுகிறது. பழுப்பு அரிசி ரூ.39-க்கு விற்கப்படுகிறது. ரூ.37-க்கு விற்ற இட்லி அரிசி ரூ.40 ஆக உயர்ந்துள்ளது.

கிலோ ஒன்றேக்கு 12 முதல் 14 ரூபாயும், 26 கிலோ கொண்ட ஒரு சிப்பதிற்கு 300 முதல் 500 வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

உயர்ந்த அரிசியின் விலை வருகின்ற ஒரு வருடத்திற்க்கு குறைய வாய்ப்பேயில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளது மக்களை மேலும் கவலையடைய செய்துள்ளது.

author avatar
Savitha