எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயதாரணி!!
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறயுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் மிகவும் சூடுப்பிடுத்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக இணை அமைச்சரும், மூத்த தலைவருமான எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார் இந்த செயல் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வென்றவர் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி.
இன்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயதாரணி, அவர் ராஜினாமா செய்திருப்பதால் அந்த பதவி காலியாக இருப்பதாக விரைவில் அறிவிக்கப்படும்.
வருகின்ற 27,28 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் முன்னிலையில் பாஜக வில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலை தற்பொழுதே இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.