தமிழகம் முழுவதும் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை!!
பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல் படுத்துவது, சான்றிதல் வழங்கும் பணிக்கு அனைத்து வட்டங்களிலும் புதிய துணை வட்டாசியரை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
தமிழக அரசிடம் பல்வேறு கட்டங்களாக வலியுறுத்தியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில்,
தமிழகம் முழுவதும் இன்று முதல் 315 தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என 14,000 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளனர்.
எனவே சான்றிதல் தொடர்பாக அனைத்து வேலைகளும் இன்று நிறுத்தி வைக்கப்பட்டுளளது. இதனால் தமிழ அரசின் வருவாய் இழக்கும் சூழலும் ஏற்பட வாய்புள்ளது.