சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை வாய்ப்பு! டிகிரி முடித்த அனைவரும் அப்ளை பண்ணுங்க!

0
176
#image_title

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை வாய்ப்பு! டிகிரி முடித்த அனைவரும் அப்ளை பண்ணுங்க!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. அதன்படி இந்தியா முழுவதிலும் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கிளை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

அதன்படி டிகிரி முடித்த அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் ஆன்லைன் மூலமாக மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலையின் பெயர், ஊதியம், கல்வித்தகுதி மற்றும் பிற விவரங்கள் பற்றி பார்க்கலாம்.

வேலையின் பெயர் – அப்பரன்டிஸ்(Apprentice)

கல்வித்தகுதி – இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வமான கல்லூரியில் இருந்து டிகிரி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் – இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 15000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை – இந்த பணிக்கு தகுதியான நபர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு, உள்ளூர் மொழித் தேர்வு, நேர்காணல் ஆகிய மூன்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயது வரம்பு – இந்த பணிக்கு குறைந்த பட்சம் 20 வயதுள்ள நபர்களும் அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாமல் இருக்கும் நபர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலிப்பணியிடங்கள் – 3000

பணியிடங்கள் – இந்தியா முழுவதும்

விண்ணப்பக் கட்டணம் – பொதுப்பிரிவினர் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 800 ரூபாயும், எஸ்சி எஸ்டி பிரிவினர் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 600 ரூபாயும், பிடபள்யூபிடி பிரிவினர் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 400 ரூபாயும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை – தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் Central Bank Of Indian Careers 2024 என்பதை கிளிக் செய்யவும். பின்னர் பிடிஎப் பதிவிறக்கம் செய்து அதை படித்து விட்டு இறுதியாக Central Bank of India Apprentice Recruitment Apply Online என்பதை கிளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சப்மிட் கொடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – மார்ச் 6. 06-03-2024

தேர்வு தேதி – மார்ச் 10, 10-03-2024