எப்பேர்ப்பட்ட அல்சரையும் அசால்ட்டாக குணப்படுத்தும் மணத்தக்காளி!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

0
189
#image_title

எப்பேர்ப்பட்ட அல்சரையும் அசால்ட்டாக குணப்படுத்தும் மணத்தக்காளி!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

முறையாக உட்கொள்ளாதது, தாமதமான உணவு பழக்கம், கார உணவு போன்றவற்றால் குடலில் உருவாகும் அல்சர் புண்ணை குணமாக்க மணத்தக்காளி கீரையில் குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:-

*மணத் தக்காளி கீரை – 1 கைப்பிடி அளவு
*வெங்காயம் – 1/4 கப்
*வரமிளகாய் – விருப்பத்திற்கேற்ப
*சீரகம் – 1 தேக்கரண்டி
*வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
*தேங்காய்ப் பால் – 1 கப்
*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
*எண்ணெய்- தேவையான அளவு
*கடுகு – 1/4 தேக்கரண்டி
*கறிவேப்பிலை – 1 கொத்து
*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளி கீரையை தண்ணீரில் சுத்தம் செய்து வைக்கவும். அடுத்து சின்ன வெங்காயமாக இருந்தால் 10 பெரிய வெங்காயமாக இருந்தால் ஒன்று எடுத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு வர மிளகாயை ஒன்று இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மூடி தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து பால் எடுக்கவும்.

பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும். அவை சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு பொரிய விடவும்.

தொடர்ந்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், வரமிளகாய் சேர்த்து வதக்கவும். அதன் பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள மணத்தக்காளி கீரையை போட்டு பச்சை வாடை நீங்கும் அளவிற்கு வதக்கி அரைத்த தேங்காய் பாலை சேர்த்து கிளறவும்.

பிறகு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த குழம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புண்கள், அல்சர் புண் அனைத்தும் விரைவில் ஆறிவிடும்.

Previous article10 நிமிடத்தில் வாயு தொல்லை அடியோடு நீங்கிவிடும்!! ஓமத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!
Next articleஒரு ரூபாய் செலவு இல்லாமல் கண் பார்வையை பல மடங்கு அதிகரிக்க இதை ஒரு கிளாஸ் குடிங்க!