90 வயதிலும் எலும்பு இரும்பு போல் வலுவாக இருக்க இந்த ஒரு உருன்டை சாப்பிடுங்கள்!
தற்பொழுது உள்ள காலகட்டத்தில் இளம் வயதினர் கால்சியம் குறைபாட்டால் எலும்பு தேய்மான பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இதை சரி செய்ய ஊட்டச்சத்து உருண்டை செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:-
*ஆளி விதைகள்- 1 கப்
*வேர்க்கடலை- 1/2 கப்
*கோதுமை – 1/4 கப்
*தேங்காய் துண்டு – 1/2 கப்
*பாதாம் – 1/4 கப்
*உலர் அத்தி – 1/4 கப்
*பேரிச்சம் பழம் – 10
*நெய் – சிறிதளவு
*எள் – 2 தேக்கரண்டி
*நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை:-
ஒரு கப் தேங்காய் துண்டுகளை வெயிலில் காயவைத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஆளிவிதை போட்டு மிதமான தீயில் வறுக்கவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து வேர்க்கடலை மற்றும் பாதாம் பருப்பை போட்டு கருகிடாமல் வறுக்கவும்.
அதன் பின்னர் கோதுமை, எள் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து தூளாக்கவும். இதை அரைத்த தேங்காயில் சேர்த்து கலந்து விடவும்.
அடுத்து மிக்ஸி ஜாரில் பேரிச்சம் பழம், உலர் அத்தி, நாட்டு சர்க்கரை சேர்த்து அரைக்கவும். இதை அரைத்து வைத்துள்ள பொடியில் போட்டு நன்கு கலந்து விடவும்.
பிறகு கையில் நெய் தடவிக் கொண்டு இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டுக் கொள்ளவும்.
இந்த ஊட்டச்சத்து உருண்டையை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் வலுவற்று இருந்த உடல் எலும்பு இரும்பு போல் வலிமை பெறும்.