சந்தனத்தை இப்படி பயன்படுத்தினால் கருப்பான முகம் வெள்ளையாக மாறும்!
முகத்தில் உள்ள கருமை நீங்க சந்தன பேஸ்ட் தயாரித்து முகத்திற்கு பயன்படுத்துங்கள்.
1)சந்தனம்
2)பன்னீர்
ஒரு தேக்கரண்டி சந்தனத்தில் சிறிது பன்னீர் ஊற்றி பேஸ்ட் போல் குழைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்டை முகம் முழுக்க தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் வெள்ளையாக மாறும்.
1)சந்தனம்
2)தயிர்
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி சந்தனம் மற்றும் 3 தேக்கரண்டி தயிர் சேர்த்து குழைத்து முகம் முழுக்க தடவி சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் வெள்ளையாக மாறும்.
1)சந்தனம்
2)கற்றாழை ஜெல்
சந்தனம் மற்றும் கற்றாழை ஜெல்லை பேஸ்டாக்கி முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.
1)சந்தனம்
2)இளநீர்
தேவையான அளவு சந்தனம் மற்றும் இளநீரை பயன்படுத்தி பேஸ்டாக்கி முகத்திற்கு தடவி வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
1)சந்தனம்
2)பால்
3)மஞ்சள்
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி சந்தனம், 3 தேக்கரண்டி பால் மற்றும் 1 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து குழைத்து முகத்தில் தடவினால் முகம் வெள்ளையாகும்.