மீண்டும் உயர்ந்த சிலிண்டரின் விலை??

Photo of author

By Savitha

மீண்டும் உயர்ந்த சிலிண்டரின் விலை??

தமிழகத்தில் ஏற்கனவே அரிசி விலை உயர்வு சிறிய ஓட்டல்கள் முதல் இல்லதரசிகள் வரை அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது வர்த்தக சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளது,ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகிறது அந்த வகையில் இந்த மாதம் வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.23.50 உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.1937 யாக இருந்த வர்தக சிலிண்டரின் விலை ரூ.1960.50ஆக விற்க்கப்படுகிறது,
இதனை காரணம் காட்டி டீ கடை மற்றும் ஓட்டல்களிலும் உணவு மற்றும் திண்பண்டங்களின் விலை உயர வாய்புள்ளது.

வீட்டு உபயோகத்திற்க்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலையில் மாற்றமின்றி 918.50 ஆக உள்ளது குறிப்பிடதக்கது.