இழுபறியில் இருந்து வந்த மகாராஷ்டிரா தொகுதி பங்கீடு! ஒரு வழியாக முடிவுக்கு வந்துருச்சுப்பா!

0
156
#image_title

இழுபறியில் இருந்து வந்த மகாராஷ்டிரா தொகுதி பங்கீடு! ஒரு வழியாக முடிவுக்கு வந்துருச்சுப்பா!

நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் ஒரு வழியாக பேச்சு வார்த்தை நடத்தி இறுதியாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த மாதத்தின் இறுதியில் அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட முழுமையாக இல்லாத நிலையில் தேர்தலில் களமிறங்கும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக பல்வேறு பணிகளை செய்து தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது.

பாஜக தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எடுக்கும் முயற்சிகளை போலவே பாஜக கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற நினைப்பில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து உருவாக்கிய I.N.D.I.A கூட்டணி பாஜக கட்சியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றவும் அதே சமயம் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்த எதிர்கட்சிகளின் கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் தகுதி பங்கீட்டை இறுதி செய்தது. அதன்படி அதன்படி உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 63 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும் 17 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடவுள்ளது. அதே போல டெல்லியில் உள்ள மொத்தம் 7 மக்களவை தொகுதியில் 4 தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியும் 3 தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடவுள்ளது.

அதே போல குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளில் 24 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் 2 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடவுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 1 தொகுதியிலும் போட்டியிடவுள்ளது. மேலும் கோவாவில் உள்ள 2 தொகுதிகளிலும் சண்டிகர் மாநிலத்தில் உள்ள 1 தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது.

அதே போல மகாராஷ்டிரா மாநிலத்திலும் தகுதிகளை பங்கீடு செய்வதில் தொடர் இழுபறி நடந்து வந்தது. அது தற்பொழுது பேச்சுவார்த்தைக்கு பிறகு தகுதி பங்கீடு செய்வது முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதன்படி உத்தவ் தாக்கரே அவர்களின் தலைமையிலான சிவசேனா கட்சி 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளிலும் சரத் பவார் அவர்களின் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இன்னும் 48 மணிநேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.