உங்கள் பற்களில் மஞ்சள் கறை ஒட்டாமல் இருக்க வேண்டுமா? அப்போ இந்த 7 வழிகளை பின்பற்றுங்கள்!

Photo of author

By Sakthi

உங்கள் பற்களில் மஞ்சள் கறை ஒட்டாமல் இருக்க வேண்டுமா? அப்போ இந்த 7 வழிகளை பின்பற்றுங்கள்!

பற்கள் என்றாலே பளிச்சென்று வெள்ளையாக இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் ஆசைப்படுகிறோம். ஆனால் அனைவருக்கும் அவ்வாறு நடப்பது கிடையாது. ஒரு சிலருக்கு பற்கள் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும். அவர்கள் அனைவரும் பற்களை சரியாக பராமரிக்காமல் விட்டது தான் அதற்கு காரணம்.

வருமுன் காப்பது என்பதை போல வெள்ளையாக இருக்கும் பற்கள் மஞ்சள் வண்ணத்தில் மாறாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.

வழிமுறை 1…

பற்கள் வெள்ளை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறாமல் இருக்க நாம் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். பற்கள் மஞ்சள் நிறமாக மாறாமல் இருக்கவும் தண்ணீர் குடிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் இருக்கின்றது. ஆம் அடிக்கடி நாம் தண்ணீர் குடிக்கும் பொழுது பற்களின் இடுக்குகளில் ஒட்டியிருக்கும் சின்ன சின்ன உணவுத் துகள்கள் வெளியேறிவிடும். இதனால் வாயில் பாக்டீரியா உற்பத்தி ஆவது தடுக்கப்படும். சாலைவாய் உற்பத்தியை இது அதிகரிக்கும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் பற்களை இயற்கையாகவே க்ளன்சிங் செய்யும்.

வழிமுறை 2…

வெள்ளை பற்கள் மஞ்சள் நிறமாக மாறாமல் இருக்க புகைப் பழக்கம் உள்ளவர்கள் அனைவரும் புகைப் பழக்கத்தை கைவிட வேண்டும். சிகரெட் பிடிப்பதால் வெள்ளையாக இருக்கும் பற்கள் மஞ்சள் நிறமாக மாறுகின்றது. எனவே முதலில் புகைப் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

வழிமுறை 3…

சில பானங்கள் மற்றும் சில பழவகைகளை சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். டீ, காபி, சிவப்பு ஒயின் போன்ற பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதே போல பெர்ரி போன்ற அடர் நிறத்திலுள்ள பழ வகைகளை அளவோடு சாப்பிட வேண்டும். முக்கியமாக இவற்றை சாப்பிட்ட பிறகு கட்டாயம் வாய் கொப்பளிக்க வேண்டும். அவ்வாறு வாய் கொப்பளிக்கும் பொழுது பற்களில் மஞ்சள் கறை படியாமல் இருக்கும்.

வழிமுறை 4…

வெள்ளையாக இருக்கும் பற்கள் மஞ்சள் நிறமாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால் சரியான முறையில் பல் துலக்குவது முக்கியமான ஒன்றாகும். ஒரு நாளைக்கு 2 முறை கட்டாயம் பல் துலக்க வேண்டும். அவ்வாறு இரண்டு முறை பல் துலக்குவதால் பற்களில் மஞ்சள் கரை படியாமல் பார்த்துக் கொள்ளலாம்.

வழிமுறை 5…

சில நாட்களுக்கு ஒரு முறை நம்முடைய பற்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுவாக நாம் பல் வலி அல்லது பல் சம்பந்தப்பட்ட வேறு எதாவது பிரச்சனை ஏற்பட்டால் தான் பற்களை பரிசோதனை செய்ய மருத்துவரிடம் செல்வோம். அவ்வாறு இல்லாமல் குறிப்பிட்ட கால இடைவெளியில் பற்களை நாம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

வழிமுறை 6…

ஆறாவது வழிமுறை சிறிது ஒரு மாதிரியாக இருக்கும். இருந்தாலும் அதை செய்துதான் ஆக வேண்டும். ஆம் சர்க்கரை கலந்த பானங்கள் குறிப்பாக டீ, காபி, குளிர்பானங்கள் போன்ற சர்க்கரை கலந்த பானங்களை குடிக்கும் பொழுது ஸ்டிரா பயன்படுத்த வேண்டும். ஸ்டிரா பயன்படுத்தாமல் சர்க்கரை கலந்த பானங்களை குடிக்கும் பொழுது பற்களில் பட்டு பிரௌன் நிறம் மற்றும் மஞ்சள் நிறத்தை ஏற்படுத்துகின்றது. அதுவே ஸ்டிரா பயன்படுத்தி குடிக்கும் பொழுது பற்களில் மஞ்சள் நிறம் படுவதை தடுப்பதோடு பற்களின் எனாமல் தேயாமலும் பாதுகாக்கப்படுகின்றது.

வழிமுறை 7…

பற்களை துலக்க நீங்கள் என்ன விதமான பேஸ்ட் பயன்படுத்துகிறீர்கள் என்பது மிக முக்கியமாகும். பற்களில் படிந்துள்ள கறைகளை உடனடியாக நீக்கி பற்களை வெண்மையாக்கக் கூடிய டூத் பேஸ்ட்டுகளை நீங்கள் தேர்வு செய்து பற்களை துலக்க பயன்படுத்த வேண்டும்.