ஒரு ஸ்பூன் வெந்தயம் போதும் முடி புதர் போல் வெட்ட வெட்ட வளரும்!
வளர்ந்து வரும் உலகில் உணவுமுறை பழக்கம் முற்றிலும் ஆரோக்கியமற்ற ஒன்றாக மாறிவிட்டது. அதுமட்டும் இன்றி பயன்படுத்தக் கூடிய அனைத்து பொருட்களும் கெமிக்கல் நிறைந்தவையாக இருக்கிறது.
குறிப்பாக தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு, க்ரீம் அனைத்தும் கெமிக்கல் நிறைந்தவையாக இருபத்தால் தலை முடி உதிர்தல், முடி வறட்சி, இளநரை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.
எனவே இதை கட்டுப்படுத்த வெந்தயம் + கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வாருங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)வெந்தயம்
2)கற்றாழை ஜெல்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி வெந்தயம் வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற விடவும்.
மறுநாள் ஊற வைத்த வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். அடுத்து ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதனுள் இருக்கும் ஜெல்லை தனியாக பிரித்தெடுக்கவும்.
பிறகு ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை போட்டு தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 முறை அலசி எடுத்துக் கொள்ளவும்.
இந்த கற்றாழை ஜெல்லை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்கவும். இதை அரைத்த வெந்தய பேஸ்ட்டில் சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு தலைமுடிகளின் வேர்களில் படும் படி தடவி 1/2 மணி நேரத்திற்கு ஊற விடவும்.
நன்கு ஊறவிட்ட பின்னர் வெதுவெதுப்பான நீர் கொண்டு கூந்தலை அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் தலை முடிகளின் வளர்ச்சி அதிகரிக்கும்.