கரும்பு விவசாயி சின்னம் தான் வேண்டும் சீமான் பிடிவாதம்!!
தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே தேர்தல் என்றால் முதலில் கட்சி சின்னத்தை பெறுவதில் தான் அரசியல் கட்சிகள் மும்மரம் காட்டுவர், ஏனேனில் மக்கள் கட்சியின் சின்னத்தை வைத்தே கட்சியின் பெயரை கூறும் காலகட்டம் இது.
அந்த வகையில் தேர்தலில் மிக்கிய பங்காற்றும் கட்சி சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் போராடி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் தற்போது கர்நாடகாவை சார்ந்த மற்றோரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து கரும்பு விவசாயி சின்னம் தங்களுக்கு ஒதுக்ககோரி நாம் தமிழர் கட்சியினர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் முன்னுரிமை அடிப்படையிலேயே மற்றோறு கட்சிக்கு சின்னத்தை வழங்கியதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.