ஒரு ஸ்பூன் பால் இருந்தால் முகத்தை கண்ணாடி போல் பளிச்சென்று மாற்றிவிடலாம்!

0
121
#image_title

ஒரு ஸ்பூன் பால் இருந்தால் முகத்தை கண்ணாடி போல் பளிச்சென்று மாற்றிவிடலாம்!

பொதுவாக பெண்கள் ஆசைக் கொள்வது தங்களது முகம் வெள்ளையாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் கொப்பளங்கள், கரும் புள்ளிகள் முக அழகை கெடுத்து நம்பிக்கையை இழக்கச் செய்திடும்.

இவ்வாறு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட பேஸ் பேக்கை பயன்படுத்தவும் .

தேவையான பொருட்கள்:-

1)பால்
2)மஞ்சள்
3)கற்றாழை ஜெல்
4)குங்குமப்பூ

செய்முறை:-

ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 4 தேக்கரண்டி காய்ச்சாத பால், 1/4 தேக்கரண்டி மஞ்சள், 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் சிட்டிகை அளவு குங்குமப் பூ சேர்த்து கலந்து 20 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

பிறகு இதை முகத்திற்கு பூசி நன்கு மசாஜ் செய்யவும். 1/2 மணி நேரத்திற்கு பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவாக மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)தயிர்
2)தக்காளி
3)சர்க்கரை
4)மஞ்சள்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி தயிர், ஒரு தேக்கரண்டி தக்காளி சாறு, 1 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

இதை முகத்தில் தடவி 1/2 மணி நேரத்திற்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகக் கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

Previous articleயாரெல்லாம் டீ குடிக்க கூடாது என்று தெரியுமா?
Next articleசர்க்கரை நோயை அலற விடும் “வெந்தய காபி” – தயார் செய்வது எப்படி?