பீத்தாம்பரி பவுடர் இனி காசு கொடுத்து வாங்க வேண்டாம்!! கோதுமை மாவு இருந்தால் வீட்டிலேயே தயார் செய்யலாம்!

Photo of author

By Divya

பீத்தாம்பரி பவுடர் இனி காசு கொடுத்து வாங்க வேண்டாம்!! கோதுமை மாவு இருந்தால் வீட்டிலேயே தயார் செய்யலாம்!

உங்கள் அனைவரது வீடுகளிலும் செம்பு, பித்தளை பாத்திரங்கள் இருக்கும். இவை வீட்டு பூஜை அறைகளில் அதிகம் காணப்படும்.

தொடர்ந்து பயன்படுத்துவதால் செம்பு, பித்தளை பொருட்கள் அதன் பொலிவை இழந்து பழையது போல் காட்சியளிக்கும். இந்த பொருட்களை பளிச்சென்று மாற்ற பீத்தாம்பரி பவுடர் வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கோதுமை மாவு – 1 கப்
2)சிட்ரிக் ஆசிட் – 1/4 கப்
3)தூள் உப்பு – 1/4 கப்
4)சோடா உப்பு – 1/4 கப்
5)வாஷிங் பவுடர் – 1/4 கப்
6)சிவப்பு புட் கலர் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜார் எடுத்து கொள்ள வேண்டும். அதில் கோதுமை மாவு சேர்க்கவும். இந்த மாவு இல்லாதவர்கள் கடலை மாவு அல்லது அரிசி மாவு பயன்படுத்தலாம். அதன் பின்னர் சிட்ரிக் ஆசிட், தூள் உப்பு சேர்க்கவும்.

அதன் பின்னர் ஆப்ப சோடா மற்றும் வாஷிங் பவுடர் சேர்த்து கலந்து விடவும். இறுதியாக சிறிது புட் கலர் சேர்த்து நன்கு அரைக்கவும்.

இந்த பொடியை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ளவும். இதிலிருந்து ஒரு தேக்கரண்டி பீத்தாம்பரி பவுடரை ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்டை கொண்டு செம்பு, பித்தளை பாத்திரங்களை துலக்கினால் அவை புதிது போன்று பளிச்சிட செய்யும்.