இதை தொடர்ந்து 15 நாட்கள் குடித்தால் கண் கண்ணாடிக்கு விரைவில் குட் பாய் தான்!
முதுமை காலத்தில் கண் பார்வை குறைபாடு ஏற்படுவது இயல்பானது. ஆனால் இன்றைய உலகில் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்க வழக்கங்களால் சிறு குழந்தைகள் கூட கண் பார்வை குறைபாட்டால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கண் கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே உள்ளது. உணவுமுறை பழக்கத்தை காட்டிலும் அதிக நேரம் மின்னணு சாதனங்களை உபயோகிப்பதினால் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியம் உதவும்.
தேவையான பொருட்கள்:-
1)முருங்கை விதை
2)பால்
3)தேன்
4)சோம்பு
செய்முறை:-
ஒரு கப் அளவு முருங்கை விதை எடுத்து உலர்த்தி கொள்ளவும். இந்த விதையில் உள்ள பருப்பை மட்டும் பிரித்தெடுத்துக் கொள்ளவும்.
இந்த பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு சோம்பை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடு படுத்தவும். அதன் பின்னர் அரைத்த முருங்கை விதைக்கு பொடி மற்றும் சோம்பு பொடி சேர்த்து காய்ச்சிக் கொள்ளவும்.
இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து குடித்து வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.