விடாப்பிடியாக இருக்கும் திருமா- பரிசீலிக்குமா திமுக?
இந்தியா முழுவதும் நாடளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அனைத்து வேட்பாளர்களும் தங்களது விருபபமனுவை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வருகின்றனர்.
ஆனால் இன்னும் தமிழகத்தில் பெரிய கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் இறுதிகட்டத்தை எட்டவில்லை எனலாம்.
தேர்தல் கூடிய விரைவில் நடக்கவிறுக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்கவிருக்கும் வி.சி.க கட்சி திமுகவிடம் மூன்று தொகுதிகளை கேட்டிருந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் இரண்டு தொகுதியில் ஒரு தொகுதியில் யாணை சின்னத்திலும் மற்றோறு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்ட நிலையில், இரண்டு தொகுதியிலும் தங்களது சொந்த சின்னத்திலேயே போட்டியிட விடுதலை சிறுத்தை கட்சிக்கு அனுமதி அளித்துள்ளதாக முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தெரியவந்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டவாறு மூன்று தொகுதிகளை ஒதுக்காமல் அவர்களுக்கு வேறோறு சலுகையாக இரண்டு தொகுதியிலும் சொந்த சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்துள்ளது திமுக கட்சி.