குளியல் சோப் இனி காசு கொடுத்து வாங்க வேண்டாம்! வீட்டிலேயே தயார் செய்யலாம்!

0
95
#image_title

குளியல் சோப் இனி காசு கொடுத்து வாங்க வேண்டாம்! வீட்டிலேயே தயார் செய்யலாம்!

உடலின் வெளியில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற அனைவரும் குளிக்கின்றனர். குளிக்கும் பொழுது உடலின் மீது படிந்து கிடக்கும் தூசு, அழுக்கு அனைத்தும் நீங்க சோப் பயன்படுத்துவது வழக்கம். இந்த சோப்பை கடையில் வாங்காமல் வீட்டு முறையில் தயாரித்து பயன்படுத்துவது நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)காஸ்ட்டிக் சோடா – 1 கப்
2)கற்றாழை ஜெல் – 1 கப்
3)தேங்காய் எண்ணெய் – 200 மில்லி
4)வைட்டமின் ஈ கேப்சியூல் – 2
5)தேன்
6)வேப்பிலை – 1/2 கப்

செய்முறை:-

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். பிறகு அதில் வேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

பிறகு இதை ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டி ஆற விடவும். அடுத்து அதில் காஸ்ட்டிக் சோடா சேர்த்து ஒரு கரண்டி கொண்டு கலக்கவும்.

அதன் பின்னர் ப்ரஸ் கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய், வைட்டமின் ஈ கேப்சியூல் மற்றும் சிறிது தேன் சேர்த்து கரண்டி கொண்டு நன்கு கலந்து கொள்ளவும்.

இதை ஒரு சோப் மோல்டில் ஊற்றி நிழலில் 8 மணி நேரத்திற்கு வைக்கவும். ப்ரிட்ஜ் இருப்பவர்கள் அதில் வைத்து குளிர்விக்கலாம்.

பிறகு இந்த சோப்பை ஒரு நாளுக்கு பிறகு உடலுக்கு பயன்படுத்தி குளிக்கவும். இந்த குளியல் சோப் கெமிக்கல் பொருட்கள் இன்றி தயாரிக்கப்பட்டுள்ளதால் சருமத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.

Previous articleமுகம் தங்கம் போல் ஜொலிக்க “காபி தூள் + தக்காளி” போதும்!
Next articleவீட்டில் ஒரே பல்லி தொல்லையா இருக்கா? அதை ஈஸியாக விரட்டி விடலாம்!