வெயில் காலத்தில் உங்கள் முகம் அதிக பொலிவாக இருக்க முத்தான 6 வழிகள்!!
கற்றாழை ஜெல்
தேங்காய் எண்ணெய்
இந்த இரண்டு பொருட்களையும் சம அளவு எடுத்து முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முகம் அதிக பொலிவாக இருக்கும்.
உருளைக்கிழங்கு
எலுமிச்சை சாறு
சிறிது உருளைக்கிழங்கு துண்டுகளை அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி முகத்திற்கு பயன்படுத்தினால் முகம் பொலிவு பெறும்.
தேன்
பப்பாளி
ஒரு கீற்று பப்பாளியை அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்ட்டில் சிறிது தேன் கலந்து முகத்திற்கு தடவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் அதிக பொலிவு பெறும்.
தயிர்
மஞ்சள்
இரண்டு தேக்கரண்டி தயிரில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலக்கி முகத்திற்கு தடவினால் முகம் அதிக பொலிவாக இருக்கும்.
பன்னீர்
மஞ்சள்
இரண்டு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சளில் ஒன்றரை தேக்கரண்டி பன்னீர் சேர்த்து கலக்கி முகத்திற்கு தடவினால் முகம் அதிக பொலிவாக இருக்கும்.
வெள்ளரிக்காய்
தயிர்
சிறிது வெள்ளரி துண்டுகளை அரைத்து பேஸ்டாக்கி அதனுடன் தயிர் சேர்த்து முகம் முழுவதும் தடவி மஜாஜ் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவினால் முகம் பொலிவாகவும், அழகாகவும் இருக்கும்.