ஜீவாமிர்தம்: அனைத்து வகை பயிர்களையும் செழிப்பாக வளரச் செய்யும்! இதை தயாரிப்பது எப்படி?
இயற்கை விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு வரப் பிரசாதம் ஜீவாமிர்தம். யூரியா போன்ற இராசனாய உரங்களை செடிகளுக்கு பயன்படுத்துவதை காட்டிலும் ஜீவாமிர்தம் 1000 மடங்கு செடிகளுக்கு வளர்ச்சியூக்கியாக செயல்படுகிறது.
தேவையான பொருட்கள்:-
1)மாட்டு சாணம்
2)மாட்டு கோமியம்
3)நாட்டு சர்க்கரை
4)பயறு மாவு
5)மண்
6)தண்ணீர்
செய்முறை:-
ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் 100 லிட்டர் தண்ணீர் ஊற்றி 5 கிலோ மாட்டு சாணம், 3 லிட்டர் மாட்டு கோமியம் சேர்த்து ஒரு கம்பு கொண்டு கலக்கி விடவும்.
அதன் பின்னர் 1/2 கிலோ பயறு மாவு(கொள்ளு பயறு அல்லது பச்சை பயறு) சேர்த்து கலந்து விடவும்.
தொடர்ந்து ஒரு கைப்பிடி அளவு இரசாயனம் கலக்காத மண், 1 கிலோ நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
இதை காற்றுப்புகாத அளவு மூடி போட்டு 3 நாட்களுக்கு நிழல் உள்ள இடத்தில் வைத்து விடவும். பிறகு 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் ஜீவாமிர்தம் என்ற அளவில் கலந்து செடிகளுக்கு தெளிக்கவும்.
இவ்வாறு 7 நாட்களுக்கு ஒருமுறை தெளித்து வந்தால் செடிகளில் பூச்சி, புழு உருவாகாது. செடிகள் ஆரோக்கியமாக வளரும்.