‘ஒரே நாடு ஒரே தேர்தலை’விமர்சித்த கமல் – பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்!

0
211
#image_title

‘ஒரே நாடு ஒரே தேர்தலை’விமர்சித்த கமல் – பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்!

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் போது மத்திய மற்றும் மாநில அரசு உட்பட அனைத்து அரசு அதிகாரிகளின் பணிகளும் பாதிக்கப்படுகிறது எனவே நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதற்கான அனைத்து கட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

இதற்காக, நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராய கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

சமீபத்தில், இந்த உயர்மட்ட குழு ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்துவது குறித்து 18 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆய்வறிக்கையை இன்று இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவிடம் சமர்பித்துள்ளனர் குறிப்பிடதக்கது.

2024 ஆம் ஆண்டிற்க்கான நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று ஏப்ரல் 19என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இது குறித்து மக்கள் நீதி மையக்கட்சி தலைவர் கமல்ஹாசன், மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடு முழுவதும்’ ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை அமல்படுத்த கூறும் நிலையில், ஏன் நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தவில்லை என மத்திய அரசிடம் கேள்வி எமுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பாஜக மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு ஆண்டு தேர்தல் நடத்தும் பொழுது கிட்டதட்ட மூன்று மாதங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகள் உட்பட பல்வேறு கணக்கான அரசு அதிகாரிகளின் நேரம் மற்றும் பணிகள் பாதிக்கப்படுகிறது, இது குறித்த எந்த எதார்த்ததையும் அறியாமல் அறிந்து கொள்ளவும் முயற்ச்சிக்காதவர் திரு.கமல்ஹாஷன், மேலும் அவர் மக்களை சந்திக்க தைரியம் இல்லாமல் திமுகவிடம் ஒரு ராஜ்யசபா சீட்டை மட்டும் பெற்றுக்கொண்டு அவைக்கு செல்ல நினைக்கிறார் என அவரை சாடியுள்ளார்.