வெயிலால் உங்கள் முகம் கருமையாக மாறுகின்றதா? அப்போ தயிரை இப்படி பயன்படுத்துங்க

0
111
#image_title

வெயிலால் உங்கள் முகம் கருமையாக மாறுகின்றதா? அப்போ தயிரை இப்படி பயன்படுத்துங்க

தற்பொழுது வெயில் காலம் தொடங்கி நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் அனைவரும் அவர்களின் ஆற்றலை இழக்கின்றனர். ஆற்றலை இழந்தால் எதாவது பானம் அல்லது உணவை எடுத்துக் கொண்டு ஆற்றலை திரும்பப் பெற்று விடலாம். ஆனால் வெயிலால் சருமம் பாதிக்கப்பட்டால் அதை எப்படி மீட்டு எடுப்பது என்பது குறித்து யாருக்கும் தெரிவது இல்லை.

வெயில் காலம் வந்துவிட்டால் மக்கள் அதிகமாக தயிரை உணவில் சேர்த்துக் கொள்வது வழக்கம். ஏனென்றால் தயிர் உடலுக்கு குளிர்ச்சியை தரும். அதே போல தயிரை பயன்படுத்தி வெயிலில் இருந்து நம்முடைய சருமத்தை பாதுகாக்கலாம். மேலும வெயிலால் கருமையாக மாறிய நம்முடைய முகத்தை மீண்டும் வெண்மையாக வெள்ளையாக மாற்றலாம்.

அந்த வகையில் வெறும் தயிரை எடுத்து அதை நன்றாக அடித்து முகத்தில் பூசி ஊறிய பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவினால் போதும். இதை மட்டும் வாரத்திற்கு 2 அல்லது மூன்று முறை செய்தாலே முகம் வெண்மையாக மாறும். மேலும் இது போல தயிரை பயன்படுத்தி மூன்று வகையான ஃபேஸ் பேக்குகளை எவ்வாறு செய்வது என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.

கருமையாக மாறிய முகத்தை வெண்மையாக மாற்ற தயிரை பயன்படுத்தி செய்யக் கூடிய ஃபேஸ் பேக்குகள்…

1. ஒரு சிறிய பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அளவு தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல் எடுத்து சேர்த்து நன்கு கலந்து கொள்ளை வேண்டும். பின்னர் இதை எடுத்து முகத்தில் தேய்த்து 3 முதல் 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் இதை 15 அல்லது 20 நிமிடம் கழிந்து குளிர்ந்த நீரை கொண்டு கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்தால் முகம் பளிச்சென்று வெள்ளையாக மாறும்.

2. ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து 20 நிமிடம் கழிந்து குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும். அவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் முகம் பால் போன்று வெள்ளையாக மாறும்.

3. ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் எடுத்துக் கொண்டு ஒரு ஸ்பூன் தேனை அத்துடன் சேர்த்து கலந்து கொள்ளை வேண்டும். இந்த கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து 15 அல்லது 20 நிமிடம் கழிந்து முகத்தை குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும். அவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை இதை செய்து வந்தால் முகம் வெண்மையாக மாறும்.