விடாமல் துரத்தும் சைனஸ் பிரச்சனை! அதிலிருந்து விடுதலை பெற எளிமையான வீட்டு வைத்தியம் இதோ!

0
204
#image_title

விடாமல் துரத்தும் சைனஸ் பிரச்சனை! அதிலிருந்து விடுதலை பெற எளிமையான வீட்டு வைத்தியம் இதோ!

நம்மில் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால் அது சைனஸ் பிரச்சனை தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வரம்பின்றி அனைவருக்கும் சைனஸ் பிரச்சனை இருக்கின்றது. அதுவும் குளிர்காலம் தொடங்கி விட்டால் அனைவருக்கும் சைனஸ் பிரச்சனை வந்துவிடும்.

சைனஸ் பிரச்சனையால் தொடர்ந்து இருமல் தும்மல் வந்து கொண்டே இருக்கும். மேலும் தூசிகள் நிறைந்திருக்கும் இடத்திற்கு சென்றால் தொடர்ச்சியாக தும்மல் வந்து கொண்டே இருக்கும். அவ்வாறு நம்மை பாடாய் படுத்தும் இந்த சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுபட ஒரு நல்ல எளிமையான வீட்டு வைத்தியம் பற்றி தற்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

* மிளகு தூள் – கால் ஸ்பூன்
* மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
* சீரகத்தூள் – அரை ஸ்பூன்
* தேன் – ஒரு ஸ்பூன்

செய்முறை…

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைக்க வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொண்டு அதை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் தண்ணீர் லேசாக கொதிக்கத் தொடங்கியதும் அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் சீரகத்தூள், கால் ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

இதில் சேர்க்கப் பட்டிருக்கும் பொருட்களின் சத்துக்கள் அதில் இறங்கும் அளவு கொதித்தால் போதும். சத்துக்கள் இறங்கியதும் அடுப்பை ஆப் செய்து விட்டு இதை இறக்கி சுவைக்காக இதில் ஒரு ஸ்பூன் மலைத் தேன் சேர்த்து கலந்துவிட்டு குடிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.

Previous article60 வயதில் 20 வயது இளமை பொலிவு கிடைக்க இந்த பொருட்களை அரைத்து முகத்தில் தடவுங்கள்!!
Next article12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு! தமிழ்நாடு காவல்துறையில் ரூ.1,14,800 சம்பளத்தில் வேலை!!