ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன்! கூடுதல் பொறுப்பு இவருக்கா?
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றி வந்த தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தன்னுடைய பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து கூடுதல் பொறுப்பு ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகின்றது. தேர்தலில் களமிறங்கும் கட்சிகள் தேர்தலை சந்திக்க அனைத்து பணிகளையும் செய்து வருகின்றது.
மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதையடுத்து வரும் தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் போட்டியிடப் போவதாக தகவல்கள் பரவி வந்தது. இதையடுத்து புதுச்சேரி துணை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்வதாக கூறி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் நேற்று(மார்ச்18) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து இன்று(மார்ச்19) ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணை ஆளுநர் பதவியும் தெலங்கானா மாநில ஆளுநர் பதவியும் வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தேர்தலை சந்திக்கவுள்ளதாகவும் அவர் திருநெல்வேலி அல்லது தென் சென்னை ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடப் போவதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.