மங்கு தேமல் மறைய இந்த இலையில் எண்ணெயை தயாரித்து தோலில் தடவுங்கள்!!

0
175
#image_title

மங்கு தேமல் மறைய இந்த இலையில் எண்ணெயை தயாரித்து தோலில் தடவுங்கள்!!

தோலில் மங்கு,தேமல்,படர் தாமரை,அரிப்பு இருந்தால் அதை குணமாக்கி கொள்ள மருத்துவரை நாட வேண்டிய அவசியம் இல்லை.காரணம் தோலுக்கு குப்பைமேனியை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை.

இந்த குப்பைமேனியை தேங்காய் எண்ணையில் காய்ச்சி தோலில் தடவினால் தோல் தொடர்பான அனைத்து வியாதிகளும் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)குப்பைமேனி இலை

2)தேங்காய் எண்ணெய்

3)மஞ்சள் தூள்

செய்முறை:-

ஒரு கப் குப்பைமேனி இலையை சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.5 நிமிடங்கள் வரை எண்ணையை மிதமான சூட்டில் சூடாக்கிய பின்னர் அரைத்த குப்பைமேனி விழுதை அதில் போடவும்.

பிறகு 10 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி ஆறவிடவும்.

இந்த எண்ணெயை பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும்.உடலில் மங்கு,தேமல் இருந்தால் அதன் மீது பூசவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தோல் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் சரியாகும்.

Previous articleஉங்கள் கேஸ் அடுப்பு பர்னரை இப்படி சுத்தம் செய்தால் அவை கடையில் வாங்கியது போல் பளிச்சிடும்!!
Next articleஉங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இதோ இப்படி செய்யுங்க!