உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இதோ இப்படி செய்யுங்க!

0
111
#image_title

உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இதோ இப்படி செய்யுங்க!

நம்மில் பலருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி என்பது குறைவாக இருக்கும். முதலில் நோய் எதிர்ப்பு சக்தி என்றால் நமக்கும் நம்முடைய உடலுக்கும் எந்தவித நோயும் அண்டாமல் அதாவது பிறருக்கு எந்த வித தொற்று நோய் வந்தாலும் அதிலிருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தி நம்முடைய உடலில் கவசமாக செயல்படுகின்றது.

இந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கம் நபர்களுக்கு தொற்று நோய் மட்டுமில்லாமல் எந்தவித நோய் ஏற்படாது. அப்படியே ஏற்பட்டாலும் விரைவில் குணமடைந்து விடுவார்கள். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அனைவருக்கும் தொற்று நோய் எளிதில் தாக்கும். எனவே நம்முடைய நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் அருமையான மருந்தை தயார் செய்வது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

* மலை நெல்லிக்காய்
* மிளகு
* தேன்
* மஞ்சள் பொடி

செய்முறை…

முதலில் மலை நெல்லிக்காயை விதை நீக்கி தட்டி அதிலிருந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு சூடான தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் 5 மிளகு எடுத்து தட்டி அதையும் அதில் சேர்த்துக் கொள்ளவும். இதில் இயற்கையான கிருமிநாசினி என்று அழைக்கப்படும் மஞ்சள் பொடி 3 சிட்டிகை சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக இதில் தேன் சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் பருகி வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.