BIG BREAKING: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

0
230
#image_title

BIG BREAKING: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 12 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.நாளை அதாவது மார்ச் 22 ஆம் தேதியுடன் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நிறைவடைய இருக்கிறது.11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 அன்று தொடங்கிய பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 24 அன்று நிறைவடைய உள்ளது.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தொடங்க உள்ள பொதுத்தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதியில் முடிவடைய இருக்கிறது.

அதன் பின்னர் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு நடைபெறுவது வழக்கம்.ஆனால் வருகின்ற ஏப்ரல் 19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடத்த வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.அதுமட்டும் இன்றி கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்படும் எனவே முழு ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்தி கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டிய தேர்வு நடத்தி கோடை விடுமுறை அளிப்பது குறித்து பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது.

அதன்படி 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12 ஆம் தேதி முடிய உள்ளது.ஏப்ரல் 13 ஆம் தேதியில் இருந்து கோடை விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக பள்ளி கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Previous articleஇறங்க மறுக்கும் தங்கம் விலை!! இன்று பவுனுக்கு எவ்வளவு உயர்ந்து இருக்கிறது தெரியுமா?
Next articleகேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய எம்எஸ் தோனி! சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் இவரா!