கோடை வெயிலில் உங்கள் சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் காசு கொடுத்து வாங்காதீங்க!! இதை செய்வது ரொம்ப ஈஸி தான்!!
கோடை காலத்தில் சருமத்தை பாதுகாப்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.சருமத்தில் கரும்புள்ளிகள்,கொப்பளங்கள் வர வாய்ப்புகள் அதிகம்.தோல் தொடர்பான பாதிப்புகள் நீங்க இந்த வைத்திய குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றி வரவும்.
தேவைப்படும் பொருட்கள்:
*நல்லெண்ணெய்
*ஆலிவ் எண்ணெய்
*பாதாம் எண்ணெய்
இந்த மூன்று எண்ணையையும் 50 மில்லி அளவு எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து நெல்லெண்ணெய்,ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் 15 நிமிடங்களுக்கு நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.
இதை ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும்.இதை சருமத்திற்கு பூசி வந்தால் வெயில் காலத்தில் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
மற்றொரு தீர்வு உங்களுக்காக:
தேவையான பொருட்கள்:-
*வெள்ளரிக்காய்
*ரோஸ் வாட்டர்
*ஆரஞ்சு சாறு
செய்முறை:-
கால் கப் அளவு நறுக்கிய வெள்ளரி துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் மற்றும் 2 தேக்கரண்டி ஆரஞ்சு பழ சாறு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
இதை ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும்.இந்த க்ரீமை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் சருமம் மிகவும் பொலிவாகவும்,மிருதுவாகவும் இருக்கும்.