Beauty Tips, Life Style, News

தலையில் பற்று போல் ஒட்டி இருக்கும் பொடுகை அடியோடு நீக்க இதை தடவி குளியுங்கள்!!

Photo of author

By Divya

தலையில் பற்று போல் ஒட்டி இருக்கும் பொடுகை அடியோடு நீக்க இதை தடவி குளியுங்கள்!!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பொடுகு தொல்லையால் அவதியடைந்து வருகின்றனர்.இதனால் முடி உதிர்தல்,தலை அரிப்பு ஆகியவை ஏற்படுகிறது.இந்த பொடுகு பாதிப்பை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் சரி செய்து விட முடியும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை
2)வேப்ப எண்ணெய்
3)எலுமிச்சை சாறு
4)வேப்பம்பூ

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை தலை முழுவதும் தடவி 30 நிமிடங்களுக்கு பின்னர் ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 4 தேக்கரண்டி வேப்ப எண்ணெய் ஊற்றவும்.பிறகு அதில் 1/4 கைப்பிடி அளவு வேப்பம் பூ சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெயில் சிறிது எலுமிச்சம் பழ சாறு சேர்த்து ஆறவிட்டு தலை முழுவதும் அப்ளை செய்யவும்.

ஒரு மணி நேரம் கழித்து சீகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும்.இவ்வாறு வாரம் 2 முறை செய்து வந்தால் பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

சிக்கனமாக செலவு செய்து லட்ச கணக்கில் சேமிக்க 5 முத்தான வழிகள் உங்களுக்காக!!

2 ரூபாய் செலவு செய்தால் உடலில் உள்ள மொத்த மருக்களை உதிர வைக்கும் மருந்து ரெடி!