சற்று நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை பத்து நாட்கள் காவலில் எடுக்கும் அமலாக்கதுறை!

0
258
#image_title

சற்று நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை பத்து நாட்கள் காவலில் எடுக்கும் அமலாக்கதுறை!

கடந்த 2021, 2022ஆம் ஆண்டு கண்டு வரப்பட்ட மதுபான கொள்கை வழக்கில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அதனை அமலாக்கதுறை எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக ஏழு முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையிலும் அவர் ஆஜர் ஆகாததால் அவரை நேற்று இரவு கைது செய்தது அமலாக்கதுறை.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், மணிஷ் சிஷோடியா, சத்யேந்திர ஜெயின், பிஆர்எஸ்ஸின் கவிதா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நேற்றிரவே இதனை அவசர வழக்காக கருதி விசாரணை நடத்த ஆம்ஆத்மி சார்பில் கோரிக்கை விடுத்த நிலையில் உச்சநீதிமன்றம் அதனை மறுத்தது, எனவே இன்று அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் பட்டியலிடப் பட்டுள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது அமலாக்கதுறை.

ஆம்ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் பெரும் பதற்றம் நிலவுவதால் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க டெல்லியில் உள்ள ஆம்ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தில் போலிசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இன்னும் சில தினங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டெல்லி முதல்வர் மீது மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.

Previous articleகுடும்பத் தலைவிகளுக்கு மாதம்3000ஆம்? அதிரடி காட்டிய அதிமுக அறிக்கை!
Next articleGOLD வாங்க இது தான் சரியான நேரம்!! நகைப்பிரியர்களே தங்கம் விலை இன்று இறங்கு முகத்தில் உள்ளது!!