குடும்பத் தலைவிகளுக்கு மாதம்3000ஆம்? அதிரடி காட்டிய அதிமுக அறிக்கை!

0
162
#image_title

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்3000ஆம்? அதிரடி காட்டிய அதிமுக அறிக்கை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுவது, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது என மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெட்ரோல், டீசல் விலையை 70ஆக நிர்ணயம் செய்வது, சமையல் சிலிண்டர் விலையை 500ஆக குறைப்பது உள்ளிட்ட 2024ஆம் ஆண்டிற்கான திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு இருந்தார்.

அந்த அறிக்கையை முந்தும் அளவுக்கு, முன்னதாக அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை இரண்டு கட்டங்களாக அதிமுக வெளியிட்ட நிலையில் இன்று அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அந்த தேர்தல் அறிக்கையில் சென்னயில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தல், குற்ற வழக்கு சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிடவேண்டும், ஆளுநர் நியமன முறை குறித்து கருத்து கேட்க வேண்டும், சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும், மகளிர் உரிமை தகை மாதம் 3,000ஆக உயர்த்த வலியுறுத்தல், வழக்காடு மொழியாக தமிழ் இடம் பெற வேண்டும், நீர் தேர்விற்க்கு பதிலாக மாற்று தேர்வு முறை உள்ளிட்ட சிறபம்சங்களை கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

author avatar
Savitha